தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: 36 மணி நேரத்துக்குள் 5 மாகாணங்கள், 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 50 மிமீக்கும் அதிக மழை பெய்யும். பலத்த காற்று, மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: 36 மணி நேரத்துக்குள் 5 மாகாணங்கள், 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாகப் பரவலடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (மே 19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், பல மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.

காற்று நிலைமையைப் பொறுத்தவரை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அப்பகுதிகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT