கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் சிக்கிய கடலாமை பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்பு
காலி கோட்டைக் கடற்கரையோரப் பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த கடலாமையொன்றை காலி கோட்டை பொலிஸ் காவலரண் அதிகாரிகள் மீட்டு மீண்டும் கடலில் விடுவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலி கோட்டை மதில் சுவர் பகுதியில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
கடற்கரையோரப் பாறைகளுக்கு இடையில் கடலாமையொன்று சிக்கியிருப்பதை அவதானித்த பொலிஸ் அதிகாரிகள், கோட்டை மதில் சுவரிலிருந்து கீழே இறங்கி அதனைப் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் கடலுக்குள் விடுவித்துள்ளனர்.
அப்பகுதியில் நிலவும் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் கரைக்கு அடித்து வரப்பட்ட குறித்த கடலாமை பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். காலி கோட்டை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரே இம்மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.