கொழும்பு - கண்டி பிரதான வீதி கீழ் கடுகண்ணாவை பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதி இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) அதிகாலை 6.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கீழ் கடுகண்ணாவை பகுதியில் வீதியில் விழும் அபாயத்தில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கும், அது தொடர்பான பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும் இந்த ஏழு மணித்தியால வீதி மூடல் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள இந்த வீதி மூடல் குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், வீதி மூடப்படுவதற்கு முன்னதாகத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசரகால செயற்பாட்டு மையமும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.