மஸ்கெலியா பாடசாலை மாணவர்கள் 36 பேர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட பின்னர் திடீர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான குறைந்தது 36 மாணவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பாடசாலை மாணவர்கள் 36 பேர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையைச் சேர்ந்த குறைந்தது 36 மாணவர்கள் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.45 மணியளவில் குறித்த பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை உணவை உட்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தபோது, அவர்களில் சுமார் 36 பேருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின் பின்னர் 30 மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு மாணவர்களும் மூன்று மாணவிகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு இவ்வாறு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT