நுவரெலியாவில் காட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்

இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். 

நுவரெலியாவில் காட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியா, டயகம - 3ஆம் பிரிவு பெருந்தோட்டப் பகுதியிலிருந்து காட்டுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் வீடு திரும்பி உள்ளார். இதனையடுத்து, மற்ற நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். 
 
இந்த நிலையில், அவர்களில் ஒருவர் மறுநாள் வீடு திரும்பியுள்ளதுடன், 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய நபர் இன்னும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து, அவரை தேடும் பணியில் பொலிஸாரும் பொது மக்களும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அங்கு மழையுடனான வானிலை நிலவுவதனால் தேடுதல் பணிகளில் சிக்கல் நிலவுவதாக டயகம பொலிஸார் கூறியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT