Breaking News: பதுளை பேருந்து விபத்தில் மூவர் பலி; 26 பேர் காயம்
பதுளை - துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளை, துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் துணைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பதுளை - துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தனியார் சுற்றுலாவுக்காக ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, 4ஆவது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.