கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு
கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர்.

கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி நிதியம் ஊடாக இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம் மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.