சீனப் பல்கலைக்கழகங்களில் DeepSeek பாடங்கள் அறிமுகம்
சீனாவின் DeepSeek நிறுவனம், OpenAI, Metaவின் மென்பொருள்களுக்குச் சமமாக இருப்பதாகப் பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பாடங்களை அறிமுகம் செய்வதுடன், சீனாவின் DeepSeek நிறுவனத்தைச் சார்ந்தபடி பாடங்கள் அமையும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் DeepSeekஇன் வெற்றி சீனாவுக்குப் பெருமையைத் தேடிக்கொடுத்துள்ளதுடன், பாடசாலைகளில் அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது இவற்றின் நோக்கம்.
அவை வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நம்பிக்கையாகும். சீனாவின் DeepSeek நிறுவனம், OpenAI, Metaவின் மென்பொருள்களுக்குச் சமமாக இருப்பதாகப் பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், நெறிமுறை விதிமுறைகளுக்கு இடையே சமநிலையைப் பெற மாணவர்களுக்குப் பாடங்கள் உதவும் என்று ஷென்சென் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.