“ஏஐ-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” – சுந்தர் பிச்சை எச்சரிக்கை
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கூகுளின் ஜெமினி ஏஐ உலகளவில் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
செயற்கை நுண்ணறிவும் பிழைகள் செய்யக்கூடியது என்பதால், ஏஐ கூறும் அனைத்தையும் உறுதியான உண்மை என நம்பக் கூடாது என பிச்சை தெரிவித்தார்.
“ஏஐ வழங்கும் தகவல்களை ஒரு கூடுதல் தகவல் ஆதாரமாக மட்டுமே கருத வேண்டும். மக்கள் இந்த தொழில்நுட்பத்தின் முழுப் பயனை பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களை மற்ற நம்பகமான மூலங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்,” என்றார்.
ஏஐ துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவதைப் பற்றி கருத்து தெரிவித்த அவர், “இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால், எந்த நிறுவனமும் முழுமையாக தப்ப முடியாது; ஆல்பபெட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. இணையம் உருவான காலத்தில் எப்படி அதிக முதலீடுகள் செய்யப்பட்டனோ, அதே நிலை தற்போது ஏஐ துறையிலும் காணப்படுகிறது,” என குறிப்பிட்டார்.
மேலும், ஏஐக்கு தேவையான உயர் திறன் கொண்ட ‘சூப்பர் சிப்’களை ஆல்பபெட் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடியுடன் போட்டியிடுவதற்காக நிறுவனம் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.