பூமியை ஒத்த தோற்றமுடைய புதிய வெளிப்புறக் கோள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

Alexander Venner தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழு, இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை The Astrophysical Journal Letters என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 30, 2026 - 21:55
பூமியை ஒத்த தோற்றமுடைய புதிய வெளிப்புறக் கோள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

பூமியைப் போன்ற சில தன்மைகளை கொண்ட ஒரு புதிய வெளிப்புறக் கோளை (exoplanet) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HD 137010 b என அழைக்கப்படும் இந்தக் கோள், செவ்வாய் கிரகத்தை விடவும் குளிர்ந்த சூழலைக் கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, NASA-வின் ஓய்வுபெற்ற Kepler Space Telescope விண்வெளி தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கோள், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளின்படி, இந்தக் கோள் பெறும் வெப்பம் பூமி பெறும் வெப்பத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது. இதனால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் –68 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோளின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடு அதிகமாகக் கொண்டிருந்தால், அதன் வெப்பநிலை ஓரளவு மிதமானதாக மாறக்கூடும் என்றாலும், தற்போது அது உயிர் வாழ ஏற்ற சூழலை கொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Alexander Venner தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழு, இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை The Astrophysical Journal Letters என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!