“பொழுதுபோக்கிற்கு இன்னும் ஈரானை 2–3 முறை தாக்குவோம்” – மேற்கு ஆசியாவில் பதற்றம்

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளைப் பற்றி டிரம்ப் கூறிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. “பொழுதுபோக்கிற்கு இன்னும் 2–3 முறை தாக்குவோம்” என்ற அவரது கருத்து மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

“பொழுதுபோக்கிற்கு இன்னும் ஈரானை 2–3 முறை தாக்குவோம்” – மேற்கு ஆசியாவில் பதற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்காசியாவில் நிலவும் பதற்ற சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட பேட்டி சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவர் ஈரானின் கார்க் தீவில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகளை கடந்த தாக்குதலில் முற்றிலும் அழித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், “பொழுதுபோக்கிற்கு இன்னும் 2, 3 முறை ஈரானை தாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி மற்றும் புரட்சிகர காவல்படை தலைவர்களுக்கான கடந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டதுடன், ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், அமெரிக்கா உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருப்பதாகவும், எண்ணெய் விலை உயர்ந்தால் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், அவர் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் ஈரானின் அரசாட்சியை தடுக்க முடிந்ததாகவும், இதை ஒரு ஜனாதிபதியாக செய்ய வேண்டிய முக்கிய கடமையாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சையான பேட்டி, ஏற்கனவே எண்ணெய் விலை உயர்ந்து $100 அமெரிக்க டொலரைத் தொட தொடங்கிய சூழலில், உலக சந்தைகளில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் பின்னணி மற்றும் டிரம்ப் கூறிய “பொழுதுபோக்கிற்கு தாக்குதல்” கருத்து, சர்வதேச அரசியலிலும், எண்ணெய் விலை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளிலும் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT