கூகுள் பிளே ஸ்டோரில் அகற்றப்படவுள்ள ஆயிரக்கணக்கான செலிகள்!

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று முதல் இந்த செயலிகள் அகற்றப்படும்.

ஜுலை 24, 2024 - 11:02
ஜுலை 24, 2024 - 11:04
கூகுள் பிளே ஸ்டோரில் அகற்றப்படவுள்ள ஆயிரக்கணக்கான செலிகள்!

குறைந்த தரம் வாய்ந்த மற்றும் செயல்படாத ஆயிரக்கணக்கான செலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்ற கூகுல் நிறுவனம் தயாராகி வருகின்றது. 

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று முதல் இந்த செயலிகள் அகற்றப்படும்.

பயனர் அனுபவம் மற்றும் செயல்பாட்டிற்கான பயன்பாடுகள் உயர் தரநிலைகளை அடைவதை உறுதிசெய்ய, நிறுவனம் அதன் ஸ்பேம் மற்றும் குறைந்தபட்ச செயல்பாட்டுக் கொள்கையைப் (Minimum Functionality Policy) புதுப்பித்துள்ளது. 

புதிய கொள்கையானது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பிளே ஸ்டோரை பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளமாக மாற்ற, பல தரம் குறைந்த பயன்பாட்டு ஆப்ஸ்களை நீக்க வழிவகுக்கிறது. 

கடந்த 2023-ஆம் ஆண்டு கூகுள் பிளே ஸ்டோரின் கொள்கைகளை மீறும் 2.28 மில்லியன் பயன்பாடுகளை வெளியிடுவதை தடுக்க அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த சமயத்தில் சுமார் 2 லட்சம் ஆப்ஸ்களை நிராகரித்தனர். தற்போது அறிவிக்கப்பட்ட புதிய கொள்கையின் முதன்மை நோக்கமாக, கூகுள் பிளே ஸ்டோரின் தரம் மற்றும் பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். 

மேலும் குறைந்த உள்ளடக்கம், வால்பேப்பர்களை மட்டும் வழங்கும் பயன்பாடுகள், வெறும் உரையை மட்டும் கொண்ட பயன்பாடுகள் மற்றும் குறைந்த செயல்பாடுகள் அல்லது அடிக்கடி நிறுவன சிக்கல்களை சந்திக்கும் ஆப்ஸ்கள் இந்த புதிய கொள்கையில் பாதிக்கப்படலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!