வாட்ஸ்ஆப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!
வாட்ஸ்ஆப் டயல் வசதி : முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதி அப்டேட்கள் வருகின்றன.

வாட்ஸ்ஆப் டயல் வசதி
முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதி அப்டேட்கள் வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்ஆப் டயல் வசதி (DIAL)என்ற புதிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் வாட்ஸ்ஆப்பில் அதிகமாக நமது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் வாட்ஸ்ஆப் கால் செய்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருப்போம்.
ஆனால், புதிய நம்பருக்கு வாட்ஸ்ஆப் கால் செய்கிறோம் என்றால் அந்த நம்பரை நாம் நமது போனில் சேவ் செய்துவிட்டு தான் அவருக்கு வாட்ஸ்ஆப் கால் செய்திருப்போம்.
இனி அந்த கவலை இல்லை ஏனென்றால் இப்படி டயல் வசதி வாட்ஸ்ஆப் கொண்டு வந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வாட்ஸ்ஆப் தெரிவிக்கவில்லை என்றாலும் இதற்கு நெருக்கமான சில வட்டாரங்கள் மூலம் இந்த தகவலானது தெரியவந்துள்ளது.