விண்ணிலிருந்து விழுந்தும் சேதமடையாத கையடக்கத் தொலைபேசி! புதிய கின்னஸ் சாதனை!

வணிக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்தை விடவும் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் மூன்று மடங்குக்கும் அதிகமான உயரமான அடுக்கு மண்டலத்திலிருந்து (stratosphere) இந்த கையடக்கத் தொலைபேசி வீசப்பட்டது. 

விண்ணிலிருந்து விழுந்தும் சேதமடையாத கையடக்கத் தொலைபேசி! புதிய கின்னஸ் சாதனை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுவீடனின் கிருனா (Kiruna) நகரில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூன் 24 அன்று ஒரு ராட்சத பலூன் மூலம் 30,607 மீட்டர் (100,418 அடி, 8 அங்குலம்) உயரத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கீழே வீசப்பட்டது. 

இந்த சோதனையின் மூலம், இயற்கை நிலப்பரப்பில் போன் கேஸுடன் கூடிய கையடக்கத் தொலைபேசி ஒன்று மிக உயரத்திலிருந்து கீழே வீசப்பட்டு, சேதமடையாமல்  பிழைத்ததற்கான புதிய கின்னஸ் உலக சாதனையை அது படைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வணிக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்தை விடவும் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் மூன்று மடங்குக்கும் அதிகமான உயரமான அடுக்கு மண்டலத்திலிருந்து (stratosphere) இந்த கையடக்கத் தொலைபேசி வீசப்பட்டது. 

இந்த சாதனையை 'RHINOSHIELD PTE. LTD' மற்றும் 'Sent Into Space LTD' ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிகழ்த்தியுள்ளன.

இந்த சாதனையின் போது கையடக்கத் தொலைபேசியானது RHINOSHIELD நிறுவனத்தின் 'AirX' கேஸ் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கார்களின் ஏர்பேக்குகள் (airbags) மற்றும் விளையாட்டு காலணிகளில் உள்ள காற்று மெத்தைகளின் (air cushions) அதிர்வு உறிஞ்சும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இந்த கேஸ் வடிவமைக்கப்பட்டது. 

 கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, இந்த கையடக்கத் தொலைபேசி வீசப்படும் போது பாராசூட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், போன் கேஸ் நேரடியாக தரையைத் தொட வேண்டும் என்ற விதியும் விதிக்கப்பட்டிருந்தது.

மனித நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் விழுந்த இந்த கையடக்கத் தொலைபேசி எந்தவொரு சேதமுமின்றி மீட்கப்பட்டது. 

எனினும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்த இந்த கையடக்கத் தொலைபேசியை ட்ராக் செய்து கண்டுபிடிப்பதற்கு மீட்புக் குழுவினருக்கு 5 மணி நேரத்துக்கும் மேலாகியது. 

மறுசுழற்சி செய்யக்கூடிய, ஒரே பொருளிலான தயாரிப்புகளும் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் மிகச் சிறந்த ஆயுள் மற்றும் நீடித்த தன்மையை வழங்க முடியும் என்பதை நிரூபிக்கவே, இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT