"காலம் பதில் சொல்லும்; அண்ணன் விஜய் தொடரட்டும்" – அரசியல் குறித்து சிம்பு இன்டர்வியூ

நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அரசியலில் தனக்கு ஆர்வமில்லை என்றும், எதிர்காலம் காலத்தால் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து "அண்ணன் தொடரட்டும்" என கருத்து வெளியிட்டுள்ளார்.

"காலம் பதில் சொல்லும்; அண்ணன் விஜய் தொடரட்டும்" – அரசியல் குறித்து சிம்பு இன்டர்வியூ
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பன்முகத் திறமையாளருமான சிலம்பரசன் (சிம்பு / எஸ்.டி.ஆர்) சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அரசியல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்ஸில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, எஸ்.தானு தயாரிக்கிறார். சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நேர்காணலில் சிம்புவிடம், "எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை. என் தந்தை அரசியலில் சந்தித்த கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்ததால் அந்தப் பக்கம் எனக்கு விருப்பம் வரவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. காலம் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து கேட்டபோது, "அவருடைய 100 நாள் ஆட்சி சரியாக சென்று கொண்டுள்ளது. இருப்பினும், அதைப் பற்றி இப்போதே மதிப்பிடுவது சரியில்லை; நேரத்தை கொடுக்க வேண்டும். இப்போதைக்கு எங்கள் அண்ணன் நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளார். அண்ணனே தொடரட்டும், அவர் அதை கண்டினியூ பண்ணட்டும்" என்று கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT