தமிழக முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்...!

தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்...!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழக வெற்றி கழகம் சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கட்சித் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை இருப்பதால், பின்னர் தவெக உறுப்பினர்கள் எண்ணிக்கை 107 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து  இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் மொத்த ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் Rajendra Arlekar அவர்களை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், பெரும்பான்மை ஆதரவு கடிதங்களும் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதன்படி, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும், விஜயுடன் சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT