டிரம்பின் அதிரடி பதிவு: “காமனெயி மரணம் – ஈரானிய மக்களுக்கு வரலாற்று வாய்ப்பு”

மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
டிரம்பின் அதிரடி பதிவு: “காமனெயி மரணம் – ஈரானிய மக்களுக்கு வரலாற்று வாய்ப்பு”
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமனெயி மரணம் குறித்து கடும் சொற்களுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “வரலாற்றில் மிகக் கொடூரமான மனிதர்களில் ஒருவராகக் கருதப்பட்ட காமனெயி இப்போது உயிரிழந்துள்ளார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமன்றி, அவரது வன்முறை நடவடிக்கைகளால் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ள உலகெங்கிலும் உள்ள பலருக்கும் கிடைத்த நீதியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், “எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை அவர் ஏமாற்ற முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட துல்லியமான நடவடிக்கையின் போது, அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், “இப்போது ஈரானிய மக்களுக்கு தங்கள் நாட்டை மீட்டெடுக்க கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு இது. புரட்சிகர காவல் படை (IRGC), இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு நாடுகின்றனர் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன” என டிரம்ப் கூறியுள்ளார்.

இறுதியாக, “மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest மத்திய கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -