சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில், ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), ஐந்து முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ஐந்து முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணிகளும் கூகுளின் "உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள்" பட்டியலில் இடம்பெறவில்லை!
அதற்குப் பதிலாக, பஞ்சாப் கிங்ஸ் (4வது இடம்) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (5வது இடம்) ஆகிய அணிகள் உலக ரீதியாக அதிக தேடல்களைப் பெற்றுள்ளன. இவை இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்றாலும், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் இறுதிப் போட்டி வரை சென்றது, அதுவே அவர்களுக்கு உலக கவனத்தை ஈர்த்ததாகத் தெரிகிறது.
இவற்றைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் (6வது), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (7வது) ஆகிய அணிகளும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளன.
பொதுவாக, உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணி என்ற முதலிடத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் FC (PSG) பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவர்களின் வீரர் உஸ்மான் டெம்பேலே 2025 ஆம் ஆண்டு பாலன் டி ஓர் (Ballon d’Or) விருதை வென்றது தான்.
முதல் 10 பட்டியல்
- பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் FC (கால்பந்து)
- எஸ்.எல். பென்ஃபிகா (கால்பந்து – போர்ச்சுகல்)
- டொராண்டோ ப்ளூ ஜேஸ் (பேஸ்பால்)
- பஞ்சாப் கிங்ஸ் (ஐபிஎல்)
- டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐபிஎல்)
- குஜராத் டைட்டன்ஸ் (ஐபிஎல்)
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ஐபிஎல்)
- ஓக்லஹோமா சிட்டி தண்டர் (NBA – கூடைப்பந்து)
- இந்தியானா பேசர்ஸ் (NBA)
- சியாட்டில் மரைனர்ஸ் (பேஸ்பால்)
2025 ஆம் ஆண்டு RCB கோப்பை வென்றதும், CSK-MI போன்ற ஜாம்பவான் அணிகளின் பெயர்கள் கூகுள் தேடல்களில் இடம்பெறாமல் போனதும், நவீன ரசிகர் கவனம் மட்டுமல்ல, இணைய சமூக ஊடக போக்கும் மாறி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. புதிய அணிகள், புதிய நட்சத்திரங்கள் மீது உலக கவனம் மாறி வருவது தெளிவாகிறது.
"கோப்பை வெல்வதும், உலகம் தேடுவதும் இனி ஒன்றல்ல!"