நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிராஜுக்கு வாய்ப்பு மறுப்பு: முகமது கைஃப் கடும் விமர்சனம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாதமை தொடர்பில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிராஜுக்கு வாய்ப்பு மறுப்பு: முகமது கைஃப் கடும் விமர்சனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாதமை தொடர்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஆசியாவுக்கு வெளியே இந்திய அணி வெற்றிபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளிலும் முகமது சிராஜ் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் சிராஜ் இல்லாமல் ஆசியாவுக்கு வெளியே இந்திய அணி எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பதினொருவர் அணியில் இடம்பெறாத சிராஜுக்கு, நேற்று (27) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீரின் இந்தத் தீர்மானத்தை முன்னாள் இந்திய வீரர்களான வாசிம் ஜாபர் மற்றும் முகமது கைஃப் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முகமது கைஃப், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ் மீண்டும் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதை நம்புவது கடினமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பந்துவீச்சுப் பிரிவில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவதற்கு முதன்மையாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய வீரர்களில் சிராஜும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் மோர்னே மோர்கல், சிராஜை உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் எனப் பாராட்டியிருந்ததுடன், அவர் சிறப்பாகப் பந்துவீசி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான நிலையிலும் சிராஜுக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதமை தொடர்பில் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

32 வயதுடைய முகமது சிராஜ் இதுவரை இந்திய அணிக்காக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT