இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேபோல், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரை வேகமுள்ள ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -