இந்தியத் திரைப்பட விழா 2025 இலங்கையில் ஆரம்பம்

இந்தியத் திரைப்பட விழா 2025, பொலிவூட் வெற்றித் திரைப்படமான “83” கொழும்பில் உள்ள பி.வி.ஆர் சினிமாவில் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திரையிடப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனவரி 7, 2025 - 22:00
இந்தியத் திரைப்பட விழா 2025 இலங்கையில் ஆரம்பம்

இந்தியத் திரைப்பட விழா 2025, பொலிவூட் வெற்றித் திரைப்படமான “83” கொழும்பில் உள்ள பி.வி.ஆர் சினிமாவில் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திரையிடப்பட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை 1983 ஆம் ஆண்டில் இந்தியா வெற்றிகொண்ட வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றியினை விவரிக்கும் இத்திரைப்படத்தை பார்வையிட நூற்றுக்கணக்கான ரசிகர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்ட அதேவேளை, 1996 இலங்கை கிரிக்கட் ஜாம்பவான்கள் விசேட விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள், விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவமளித்து இந்தியத் திரைப்படங்கள் வழங்கும் வகிபாகத்தினை சுட்டிக்காட்டியதுடன் இந்திய திரைப்படத் துறையினை மெச்சியிருந்தார்.

இதேவேளை, இந்தியா இலங்கை இடையில் இரு நாட்டு மக்களிடையிலுமான உறவுகளை வலுவாக்கும் செயற்பாடுகளை நோக்கிய பயணத்தில் 2025 புது வருடத்தில் இடம்பெறும் முதலாவது முன்னெடுப்புகளில் நாடளாவிய ரீதியில் நடைபெறும் இத்திரைப்பட விழாவும் ஒன்றென உயர் ஸ்தானிகர் அவர்கள் இங்கு குறிப்பிட்டிருந்தார்.  இந்தியத் திரைப்பட விழா 2025 பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நகரங்கள் உட்பட இலங்கை முழுவதும் உள்ள நகரங்களில் ஜனவரி 06 முதல் 10 வரையில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் மொனராகலை மாவட்ட நூலக கேட்போர் கூடத்தில்அம்மா கணக்கு”, “விக்ரம்மற்றும்ஜெய் பீம்ஆகிய திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

இதேவேளை ஊவா மாகாண ஆளுநர் கௌரவ ஜே எம் கபில ஜெயசேகர மற்றும் இந்திய கொன்சூல் ஜெனரல் ஶ்ரீ ஹர்விந்தர் சிங் ஆகியோர் இணைந்து இந்நூலகத்தில்பாரத நிலையம்ஒன்றையும் ஸ்தாபித்துவைத்தனர். அப்பிரதேச மக்களுக்காக அங்கு  இலவச ஆயுள்வேத மருத்துவ முகாம் ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் கொழும்பில்ஆர்ஆர்ஆர்”, “ஆட்டம்”, “திங்கிங் ஒஃப் ஹிம்மற்றும்ரேவாஆகிய நான்கு திரைப்படங்கள் காண்பிக்கப்படவுள்ளன. கொழும்பில் நடைபெறும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிற்றேட்டில் காணமுடியும். இலவச அனுமதி டிக்கட்டுகளைப் பெறுவதற்கு dir.icc.colombo@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!