200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா? இத்தனை படங்களா!

200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்:

Dec 29, 2023 - 08:18

1. கேப்டன்

கேப்டன்

ரசிகர்களால் அன்போடு 'கேப்டன்' என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். துவண்டு கிடந்த தமிழ் திரையுலகை தனி ஒரு ஆளாக முன்னெடுத்து கொண்டுவந்தவர் விஜயகாந்த். ரஜினியும், கமழும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்டவர் விஜயகாந்த்.

2. அற்புதமான மனிதர்

அற்புதமான மனிதர்

திரைப்படங்களை தாண்டி அனைவராலும் லைக் செய்யப்பட்ட அற்புதமான மனிதர் விஜயகாந்த். டாப் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்த இந்த தமிழ் சினிமாவின் பார்வையை முற்றிலுமாக மாறியவர். தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றல் முதல் ஆளாக முன்வந்து நிற்பவர் தான் நம்ப கேப்டன். 

3. 200 நாட்களுக்கும் மேல் சாதனை

200 நாட்களுக்கும் மேல் சாதனை

திரைப்படங்களை பொறுத்தவரை இன்றெல்லாம் ஒரு படம் 30 நாட்கள் ஓடினாலே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் அப்போவே விஜயகாந்தின் பல படங்கள் 200 நாட்களுக்கும் மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்துள்ளது. அதன்படி 200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

4. வானத்தைப்போல

வானத்தைப்போல

இயக்குநர் விக்ரம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் வானத்தைப்போல. கேப்டன் விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், வினிதா, செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இப்படம் சுமார் 200 நாட்களும் மேல் திரையரங்குகளில் ஓடியது.

5. புலன் விசாரணை

புலன் விசாரணை

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான படம் புலன் விசாரணை. விஜயகாந்த், ரூபினி, நம்பியார், ராதாரவி, ஆனந்த் ராஜ், சரத்குமார், செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியானது. இப்படம் வெளியாகி சுமார் 220 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.

6. மாநகர காவல்

மாநகர காவல்

இயக்குநர் எம். தியாகராஜன் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் மாநகர காவல். விஜயகாந்த், நடிகை சுமா, நாசர், ஆனந்த் ராஜ் ,நம்பியார், செந்தில், தியாகு, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழகத்தில் சுமார் 230 நாட்களுக்கு மேல் ஓடியது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்தின் நடிப்பு மக்களை பெரிதும் ஈர்த்து. மேலும் அந்த காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.

7. கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன்

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100வது படமாக இப்படம் வெளியாகி மெகா ஹிட் படமாக மாறியது. தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பு விஜயகாந்தின் 100வது படத்திற்கு கிடைத்தது. இப்படம் சென்னை காசி தியேட்டரில் வெளியாகி சுமார் 300 நாட்களுக்கும் மேல் ஓடியது.

8. சின்ன கவுண்டர்

சின்ன கவுண்டர்

இயக்குநர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் சின்ன கவுண்டர். ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் பொது மக்களின் முன்னதில் தனி இடத்தை அமைத்துக்கொண்டவர் விஜயகாந்த். இவரின் சின்ன கவுண்டர் திரைப்படம் வெளியாகி சுமார் 315 நாட்களுக்கு மேல் ஓடியது. விஜயகாந்த் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவாகும்.