நடிகை அனுஷ்காவின் அம்மா இவங்களா? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
நடிகை அனுஷ்காவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமா நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, விக்ரம், விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் திரைப்படத்தில் தனது உடல் எடையை அதிகரித்த நிலையில், தற்போது வரை அனுஷ்காவால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்ஸஸ் பொலிஷெட்டி எனும் படம் வெளியானது.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.