தீனா படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகர் இவர் தானா, வெளியான தகவல்!
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா.

தீனா படத்தில் அஜித் கேங்ஸ்டராகவும், பாசமான அண்ணனாகவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 23 வருடங்களை கடந்திருந்த நிலையில் அஜித்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரீ ரிலிஸாகியுள்ளது.

தீனா படம் அஜித்துக்கு மட்டுமின்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் திருப்புமுனயாக அமைந்த படமாகும். அவருக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார்.

இவர்களுடன் சுரேஷ் கோபி, திவ்யா, ஸ்ரீமன், சியாம் கணேஷ், ராஜேஷ், சீலா, உள்ளிட்டா பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என்ற பாடலுக்கு பிரபல நடிகை நக்மா நடனமாடி இருந்தார். அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசையில், இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது தீனா படத்தில், அஜித்துக்கு முன்பு ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் 23 வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த பிரபல நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன், தீனா படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தன்னுடைய மகன் தான் எனக் கூறியுள்ளார்.

கதை பிரசந்திற்கு பிடித்திருந்த போதிலும், அப்போது அதிக படங்களில் நடித்து வந்ததால் இயக்குநரிடம் காத்திருக்கும் படி கூறினார்.

ஆனால் அதற்குள் ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து ‘தீனா’ படத்தை எடுத்து முடித்து விட்டதாக தெரிவித்ததாக பிரசாந்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

தீனா என்கிற கதாபாத்திரமாகவே அஜித் இப்படத்தில் வாழ்ந்து நடித்திருந்த நிலையில், இந்த படத்திற்கு பிரஷாந்தை விட அஜித்தே மிகவும் பொருத்தமானவர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.