ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய கிரிக்கெட்டின் பிரபல நட்சத்திர வீரர்

ரோகித் சர்மா ஓய்வு: இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.

Jan 2, 2024 - 06:59
Jan 2, 2024 - 07:35

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார். அவர் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதே 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை. அவரது தலைமையிலான இந்திய அணி 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் தோல்வியை தழுவியது.  

அதன்பிறகு பிசிசிஐ அறிவித்த 20 ஓவர் இந்திய அணியில் ரோகித் பெயர் இல்லை. அவர் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவதும் சந்தேகம் தான். ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் 20 ஓவர் இந்திய அணியில் விளையாடுவாரா? இல்லையா என்பது உறுதியாக தெரிந்துவிடும். ஒருநாள் போட்டியிலும் இனி ரோகித் சர்மா இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறி.

அடுத்த உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய பிசிசிஐ முனைப்பு காட்டினால், ரோகித் சர்மாவுக்கு நிச்சயம் இந்த வடிவத்திலும் இடம் இருக்காது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது விரைவில் அவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. கேப்டன் பொறுப்பு இல்லாமல் விளையாட விரும்பினால் இன்னும் ஒருசில ஐபிஎல் தொடர்களில் ரோகித் சர்மா விளையாடலாம். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அவரின் ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.