நீண்ட நாள் எதிர்பார்த்த முக்கிய Whatsapp அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா?

whatsapp-ல் எழுத்து வடிவில் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது எனத் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்த சுவாரஸ்யமான அம்சங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

Feb 14, 2024 - 13:33

1.


வாட்ஸ்அப் செயலி என்பது தினசரி வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஒருவருக்கு ஒருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளுவதில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

2.

பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு விதமான புதிய அம்சங்கள் whatsapp-ல் அறிமுகம் செய்யப்பட்டது. எழுத்து வடிவில் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது எனத் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்த சுவாரஸ்யமான அம்சங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

3.

தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. வாட்ஸ்அப் வழியாகவும் பண மோசடி, தகவல் திருட்டு மோசடி போன்ற ஆன்லைன் மோசடிகள் அரங்கேறுகிறது.

4.

மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ் மற்றும் விளம்பரங்களை தவிர்க்கும் வகையில் வாட்ஸ்அப்-பில் ஏற்கனவே பிளாக் செய்யும் அம்சம் இருந்து வருகிறது.

5.

இந்த அம்சத்தின் மூலம் ஒருவர் உங்களுக்கு மெசேஜ் செய்த பின், அதனை திறந்து பார்த்துவிட்டுதான் உங்களால் பிளாக் செய்ய முடியும். இதனால், மெசேஜ் அனுப்பிய நபருக்கு நீங்கள் அவர்களின் மெசஜை பார்த்துவிட்டீர்கள் என தெரிந்துவிடும்.

6.

இந்நிலையில், சில மோசடி கும்பல்கள் மெசஜை திறந்து பார்த்தாலே தகவல்களைத் திருடும் செயல்களில் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். வாட்ஸ்அப்-பில் பிளாக் செய்யும் அம்சம் இன்னும் மேம்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்த நிலையில், புதிய அப்டேட்டை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

7.

இனி தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ் அல்லது தேவையற்ற விளம்பரங்களை நீங்கள் திறந்து பார்க்காமலே பிளாக் செய்யமுடியும். உங்கள் போனில் இந்த புதிய அப்டேட் இடம்பெற்று விட்டதா என்பதை செக் செய்துபாருங்கள். இல்லையென்றால் உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்.

Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.