விஜயகாந்த் மகன் திருமணம் நடக்காமல் இருப்பது ஏன்? வெளியான தகவல்!

விஜயகாந்த் மகன் திருமணம் : விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரனுக்கு 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.

Dec 30, 2023 - 09:25

1. விஜயகாந்த்

விஜயகாந்த்

கேப்டன் என்று மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்துள்ளது.

2. விஜயகாந்த்தின் மகன்

விஜயகாந்த்தின் மகன்

விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரனுக்கு 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன்.

3. விஜயகாந்த்தின் உடல்நிலை

விஜயகாந்த்தின் உடல்நிலை

திருமணம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

4. மோடி தலைமை

மோடி தலைமை

இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும், பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

5. விஜயகாந்த் மறைவு

 விஜயகாந்த் மறைவு

தனது மகனின் திருமணத்தை பார்க்காமலேயே விஜயகாந்த் மறைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.