உடுதும்பரவில் 2.2 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம் வேண்டாம்
கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பகுதியில் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 5.05 மணியளவில் 2.2 ரிக்டர் அளவுகோலில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பகுதியில் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 5.05 மணியளவில் 2.2 ரிக்டர் அளவுகோலில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நில அதிர்வு மிகவும் சிறிய அளவிலானது என்றும், பொதுமக்கள் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.