84 ஆண்டுகளுக்கு ஒருமுறை: பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தில் செல்வம் குவியும் 3 ராசிகள்!
ஜனவரி 15ஆம் தேதி – பொங்கல் நாளில் – சுக்கிரன் யுரேனஸுடன் இணைந்து “நவபஞ்சம ராஜயோகம்” என்ற அரிய ஜோதிட நிகழ்வை உருவாக்கவுள்ளார்.
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரகனாகவும் கருதப்படுகிறார். மாதம்தோறும் ராசியை மாற்றும் சுக்கிரனின் இயக்கம் அனைவரது வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது தனுசு ராசியில் உள்ள சுக்கிரன், ஜனவரி 13ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மாற்றத்துடன், பல்வேறு கிரகங்களுடன் இணைந்து சிறப்பான யோகங்களை உருவாக்கவிருக்கிறார்.
அந்த வரிசையில், ஜனவரி 15ஆம் தேதி – பொங்கல் நாளில் – சுக்கிரன் யுரேனஸுடன் இணைந்து “நவபஞ்சம ராஜயோகம்” என்ற அரிய ஜோதிட நிகழ்வை உருவாக்கவுள்ளார். இந்த யோகம் உருவாகும்போது, சுக்கிரனும் யுரேனஸும் ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் (திரிகோண ஸ்தானத்தில்) அமையும். இது மிகவும் சக்திவாய்ந்த யோகமாக கருதப்படுகிறது.
யுரேனஸ் தற்போது ரிஷப ராசியில் உள்ளது. ஒரு ராசியில் ஏழு ஆண்டுகள் வரை தங்கும் யுரேனஸ், முழு ராசி சுற்றை முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். எனவே, இந்த நவபஞ்சம ராஜயோகம் 84 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய ஜோதிட நிகழ்வாகும். இந்த யோகத்தின் பலன் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ரிஷப ராசி
இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். நீண்ட கால உழைப்பின் பலன் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள், உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் நிதி வளர்ச்சி போன்றவை கிடைக்கும். காதல் மற்றும் தம்பத்திய உறவுகளிலும் இனிமை நிலவும்.
மகர ராசி
வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வணிகர்களுக்கு பல புதிய வருமான வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரங்களை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசி
வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட கால பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். படைப்பாற்றல் மேம்படும். பணியிடத்தில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரங்களை செலவிட முடியும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது.
(இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் பொது ஜோதிட மூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மை அல்லது துல்லியத்திற்கு உத்தரவாதம் இல்லை. இது பொது தகவலாக மட்டுமே கருதப்பட வேண்டும். எந்தவொரு முடிவெடுப்பதற்கும் முன், தகுதிவாய்ந்த ஜோதிடரை அணுகுவது நல்லது.)