வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்
உலக கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் வெனிசுலா வசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
வெனிசுலாவில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலாவின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகள் அந்த நாட்டில் இருப்பது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலக கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் வெனிசுலா வசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க இராணுவம் வெனிசுலாவின் முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததாக வெளியான தகவலையடுத்து, நேற்று எண்ணெய் விலை தற்காலிகமாக சரிவடைந்தது. வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகள் அதிகளவில் உலக சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பே அந்த சரிவுக்கு காரணமாக அமைந்தது.
எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விலை குறைந்தாலும், அங்கு தொடரும் நிச்சயமற்ற சூழல் மீண்டும் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.