இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் கூடிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது, இன்று (13.11.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (13.11.2025) நிலவரத்தின்படி தங்க விலை விவரங்கள்
அவுன்ஸ் தங்கம்: ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,277,518 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம்: 24 கரட் தங்க கிராம் (1 கிராம்) 45,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) 360,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம்: 22 கரட் தங்க கிராம் (1 கிராம்) 41,320 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) 330,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம்: 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 39,440 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) இன்றையதினம் 315,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய விற்பனை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 336,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 310,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.