சுவர் இடிந்து விழுந்ததில் 17 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

பணியின் போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு அது சரியும் நிலையில் இருந்ததால் தப்பிக்க அறையின் உள்ளே ஓடியுள்ளார். அந்தச் சமயத்தில் மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிசம்பர் 21, 2025 - 08:46
சுவர் இடிந்து விழுந்ததில் 17 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி யாழ்ப்பாணம் வந்திருந்த குறித்த சிறுவன், நேற்றைய தினம் குருநகர் – பாஷையூர் பகுதியில் அமைந்திருந்த பழைய வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பணியின் போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு அது சரியும் நிலையில் இருந்ததால் தப்பிக்க அறையின் உள்ளே ஓடியுள்ளார். அந்தச் சமயத்தில் மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!