மதில், மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மூவரும் உயிரிழப்பு
அவை திடீரென இடிந்து விழுந்ததில் மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மதில் மற்றும் மண்மேடு திடீரென இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த அம்மூவரும் உயிரிழந்துள்ளனர் என அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று வியாழக்கிழமை (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவை திடீரென இடிந்து விழுந்ததில் மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, மண்ணுக்குள் சிக்கியிருந்த மூவரையும் நீண்ட நேரம் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மூவரும் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.