சுதந்திர தினத்தையொட்டி 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இந்த பதவி உயர்வுகள் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தையொட்டி 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

78வது தேசிய சுதந்திர தினத்தையொட்டி இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளில் பணியாற்றும் மொத்தம் 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, இராணுவ வீரர் பிரிவில் அதிகாரவாணையற்ற அதிகாரி–II பதவியில் இருந்த 260 பேர் அதிகாரவாணையற்ற அதிகாரி–I பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 1,211 பணிநிலை சார்ஜென்கள் அதிகாரவாணையற்ற அதிகாரி–II பதவிக்கு உயர்வு பெற்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதேபோல், 1,704 சார்ஜென்கள் பணிநிலை சார்ஜென் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், 2,339 கோப்ரல்கள் சார்ஜென் பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 2,204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் பதவிக்கும், 1,440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் பதவிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வுகள் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -