கார் கவிழ்ந்து விபத்து – யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள சேற்றுப் பகுதியில் கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் கவிழ்ந்து விபத்து – யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அச்சுவேலி வல்லைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள சேற்றுப் பகுதியில் கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது காரில் பயணித்திருந்த திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக, மகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த மூவரும் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT