செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் இணைந்திருந்த மோதிரம் மீட்பு

சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் இணைந்திருந்த மோதிரம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாள் நடவடிக்கைகளில், விரல் எலும்புடன் இணைந்த செப்பிலான மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய (ஜுன் 17) அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 89 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மொத்தம் 431 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 423 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT