சுகாதாரமற்ற முறையில் தயிர் கொண்டு சென்ற இருவருக்கு 60,000 ரூபாய் அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான 6 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட குறித்த இரு பிரதிவாதிகளுக்கும் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற முறையில் தயிர் கொண்டு சென்ற இருவருக்கு 60,000 ரூபாய் அபராதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உரிய வெப்பநிலை மற்றும் சுகாதாரத் தரங்களைப் பேணாமல் சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான தயிர் தொகையைக் கொண்டு சென்ற இருவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

உணவுப் பாதுகாப்பு தொடர்பான 6 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட குறித்த இரு பிரதிவாதிகளுக்கும் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முல்லைத்தீவிலிருந்து வவுனியா, குருமன்காடு பகுதியிலுள்ள கூட்டுறவு நிறுவனமொன்றுக்கு இந்தத் தயிர் தொகை கொண்டு செல்லப்பட்ட வேளையில், வவுனியா மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போதே, இவ்விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உரிய வெப்பநிலையைப் பேணாமல் தயிர் கொண்டு சென்றமை, மனித நுகர்வுக்கான உணவை கால்நடைத் தீவனத்துடன் சேர்த்துக் களஞ்சியப்படுத்தியமை, பதிவுச் சான்றிதழின்றி உணவைத் தயாரித்தமை, பெயரிடல் விதிமுறைகளை மீறியமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவைக் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்துக் கைப்பற்றப்பட்ட குறித்த தயிர் தொகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது. வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அபராதம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பால் உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்தின் போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் முக்கியம் என  பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT