ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

வவுனியா, செட்டிக்குளம் நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டு, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா மாவட்டம், செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, மூன்று தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட கும்பலால் இந்தத் துப்பாக்கி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT