திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் (26) நிறைவடைந்த நிலையில், இன்று (27) காலை பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி வாகனங்களில் வருகை தந்த 15க்கும் மேற்பட்ட பொலிஸார், சப்பாத்துக் கால்களுடன் நினைவிட வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த உருவச்சிலையை பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.