யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது.
"புதுமையான பார்வைக் கோணங்களை உருவாக்குதல்: அர்த்தமுள்ள மாற்றத்தை நோக்கிய இளங்கலை ஆய்வுகள்" என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார். மாநாட்டின் திறப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஈ. வை. ஏ. சார்ள்ஸ் வழங்கவுள்ளார்.
கலைப்பீட இளங்கலை மாணவர்களின் ஆய்வுத் திறன்கள், புதிய சிந்தனைகள் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமைகின்றது. மாணவர்கள் தமது ஆய்வுக் கண்டுபிடிப்புகளைக் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கல்விசார் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு அமர்வுகளில் முன்வைக்கப்படும் மாணவர்களின் ஆய்வுகள் துறைசார் நிபுணர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் விரிவான கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்படவுள்ளன. அத்துடன், மாணவர்களின் ஆய்வுச்சுருக்கங்கள் ஆய்வடங்கல் வாயிலாக வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.