வேலை ஆசை காட்டி ரூ.50 இலட்சம் மோசடி: கிளிநொச்சியில் ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை ஆசை காட்டி ரூ.50 இலட்சம் மோசடி: கிளிநொச்சியில் ஒருவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து பெருமளவு பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று (16) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி குறித்த நபரிடம் இருந்து 4,990,000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT