கிளிநொச்சியில் 23 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் 23 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து, கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொழிலகத்தில் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து அவரது உடல், தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த உயிரிழப்பு தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT