போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.5 கோடி சொத்துகள் முடக்கம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாகச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் இரு மாடி வீடு என்பன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.5 கோடி சொத்துகள் முடக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த முடக்க உத்தரவுகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், லொறி ஒன்றுடன் 15 மில்லியன் ரூபாய் பணமும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின்போது, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டே 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இந்த ஆடம்பர இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT