நெடுந்தீவில் அமைக்கப்பட்ட புதிய நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக நிறைவு

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் போக்குவரத்து கடற்படை கப்பல் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட புதிய நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அவசியமான எரிபொருள் போக்குவரத்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கடற்படைத் தளகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'SLNS ரணகஜ' கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இரண்டு எரிபொருள் தாங்கிகள் (bowsers) கடல் வழியாக நெடுந்தீவிற்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நெடுந்தீவை நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது அப்பகுதி மக்களின் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதோடு, தீவில் வசிக்கும் மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மிகவும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்பறை, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் தகவலின்படி, இந்த புதிய வசதியானது தீவில் வாழும் மக்களின் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மிகவும் வசதியானதாக மாற்றுவதற்கும் பெரிதும் உதவும்.

இதற்கான ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன், அதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT