யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், அதில் பயணித்த அவரது மகனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு
File image
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு (13) கனகம்புள்ளியடி சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, வேகமாகப் பயணித்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், அதில் பயணித்த அவரது மகனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், 9 வயதுடைய அவரது மகனுமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT