கல்வி அழுத்தம் காரணமாக மனமுடைந்த மாணவி உயிரிழந்தார் – வல்வெட்டித்துறை

சம்பவத்துக்குப் பின்னர் அயலவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

டிசம்பர் 19, 2025 - 11:07
டிசம்பர் 19, 2025 - 11:14
கல்வி அழுத்தம் காரணமாக மனமுடைந்த மாணவி உயிரிழந்தார் – வல்வெட்டித்துறை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில், கல்வி கற்குமாறு தாயார் தொடர்ந்து வலியுறுத்தியதால் மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த மாணவி வீட்டில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துக்குப் பின்னர் அயலவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

⚠️ கவனிக்க: வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களும் தோல்விகளும் நிரந்தரமானவை அல்ல. அவை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அதற்கான தீர்வுகள் எப்போதும் இருக்கின்றன. மனம் வலிக்கும் நேரங்களில் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. நம்பகமான ஒருவரிடம் மனம் திறந்து பேசுவதும், உதவி கேட்பதும் தைரியத்தின் அடையாளம். உடனடி உதவிக்காக இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலவச உதவி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுங்கள். உங்களின் உயிர் மிகவும் மதிப்புடையது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!