அரச வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு
சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் வழமைப்போல் இயங்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 8 மணியிலிருந்து அடுத்த 48 மணி நேர காலப்பகுதியில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவையை பாதுகாப்பது மற்றும் வைத்தியர்களுக்கு தொடர்பான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் வழமைப்போல் இயங்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.