ஈரானில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டங்கள் ‘சதி’ முயற்சி போன்றவை: அலி காமனெயி

போராட்டங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான அதிருப்தியாகத் தொடங்கி, பின்னர் பெரும் அரசு எதிர்ப்பு இயக்கமாக மாறின. இதனை ஈரான் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டிய ‘கலவரங்கள்’ என விவரித்துள்ளனர்.

ஈரானில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டங்கள் ‘சதி’ முயற்சி போன்றவை: அலி காமனெயி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானில் நடைபெற்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு ‘சதி’ முயற்சியைப் போன்றவை என அயத்துல்லா அலி காமனெயி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1, 2026 அன்று தலைநகர் தேஹ்ரான் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், போராட்டக்காரர்கள் காவல்துறை, அரசு அலுவலகங்கள், IRGC மையங்கள், வங்கிகள் மற்றும் மசூதிகளை தாக்கியதாக குற்றம்சாட்டினார். “இது ஒரு சதி முயற்சியைப் போன்றது; அந்த முயற்சி அடக்கப்பட்டுவிட்டது,” எனவும் அவர் கூறினார்.

மேலும், “தேஹ்ரானில் இது முதல் ‘கிளர்ச்சி’ அல்ல; இது கடைசியும் அல்ல. எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழலாம்,” என்று காமெனெய் எச்சரித்தார். இந்த கருத்துகள் Reuters வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அண்மைய போராட்டங்களுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இராணுவ தலையீடு குறித்து மிரட்டல் விடுத்ததாகவும், மத்திய கிழக்கு கடற்பரப்பில் விமான தாங்கி கப்பல் குழுவை அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளித்த காமெனெய், “அமெரிக்கர்கள் போரைத் தொடங்கினால், இம்முறை அது பிராந்திய அளவிலான போராக மாறும்,” என்று எச்சரித்தார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசை நிறுவிய மறைந்த அயத்துல்லா ரூஹுல்லா கொமேனி நாடு திரும்பியதன் 47வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு காமெனெய் இந்த உரையை நிகழ்த்தினார். அமெரிக்கா ஈரானை “விழுங்க” முயற்சிப்பதாகவும், அமெரிக்க ஆதரவுடன் இருந்த பஹ்லவி மன்னராட்சி காலத்துக்கு நாட்டை மீண்டும் இழுத்துச் செல்ல விரும்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

போராட்டங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான அதிருப்தியாகத் தொடங்கி, பின்னர் பெரும் அரசு எதிர்ப்பு இயக்கமாக மாறின. இதனை ஈரான் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டிய ‘கலவரங்கள்’ என விவரித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

போராட்டங்களின்போது 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என தெரிவித்துள்ளனர். வன்முறைகள் “தீவிரவாதச் செயல்கள்” காரணமாக ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Human Rights Activists News Agency (HRANA) அமைப்பு, பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் எனக் கூறி, 6,713 மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT