ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்த டிரம்ப் திட்டம்: இராணுவத்துக்கு உத்தரவு வழங்கியதாக தகவல்!

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், "நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் இதை மேலும் தாங்க முடியாது என்று அவர்களே கூறும் நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்த டிரம்ப் திட்டம்: இராணுவத்துக்கு உத்தரவு வழங்கியதாக தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானுக்கு எதிராக மீண்டும் தீவிரமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரவும், அதன் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களைத் தொடங்குமாறு அமெரிக்க இராணுவத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், "நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் இதை மேலும் தாங்க முடியாது என்று அவர்களே கூறும் நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் போர்க் குற்றங்களாகக் கருதப்படக்கூடும் என மனித உரிமை அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT