ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக தகவல். அணு திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்க இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும் வகையில் ஒரு இடைக்கால ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட இராணுவ மோதல்களுக்கு பின்னர், இரு நாடுகளும் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தன. பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இருதரப்பும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனுடன், நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் ஈரானின் அணுசக்தி மற்றும் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இரு தரப்பும் முன்வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதங்கள் எதிர்காலத்தில் விரிவான அமைதி ஒப்பந்தத்திற்கான அடித்தளமாக அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நிர்வாகத்தின் இறுதி ஒப்புதல் அவசியமாக இருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்னேற்றம், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை சீராக்குவதற்கான முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT